சென்னை:  5 வருடங்களாக 30 விழுக்காடு இடங்கள் நிரம்பாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 2011ஆம் ஆண்டில் இருந்தே படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகப் பல கல்லூரிகள் மூடப்பட்டன. பல பொறியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு விடையளித்த அவர், குறைந்தது முப்பது விழுக்காடு இடங்கள் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தால் அப்படிப்பட்ட பொறியியல் கல்லூரிகளை மூடுமாறு அறிவுறுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisements