ஸ்பெயின்: நோக்கியா – ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் அதிவேக 4G சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பார்சிலோனா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்ப்பு கூட்டமைப்பில் பேசிய இரு நிறுவனங்களும் விரைவில் 5G சேவையில் கைகோர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 5G சேவை இனிவரும் காலங்களில் அபரிவிதமான வளர்ச்சி காணும் என்றும் பாரதி – ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குனர் “அபய்” தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மிக துரித வேகத்தில் இணையதள சேவைகளை அதிக எண்ணிலான வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி வழங்கமுடியும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த சேவை ஸ்மார்ட் சிட்டி, தொழிற்சாலைகளுக்கான தானியங்கி தொழில்நுட்பம், தானியங்கி வாகன சேவைகளுக்கும் அடித்தளமாக அமையும்.

Advertisements