இந்தியா: கன்சாஸ்-ல் துப்பாக்கிச் சூட்டில் இருந்து இந்தியர்களைக் காப்பாற்ற முயன்றபோது குண்டடி பட்டு காயமான இளைஞர், இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி இந்தியர் இருவரை ஈரானியர்கள் எனக் கருதி, ஆடம் புரின்டன் எனும் 51 வயது நபர் துப்பாக்கியால் சுட்டார். கையில் துப்பாக்கியுடன் ஆடம் மிரட்டும் போது அங்கிருந்த யாரும் இந்தியரைக் காக்க முன்வராத நிலையில், ஐயான் கிரில்லட் எனும் 24 வயது இளைஞர் தடுக்க முன்வந்தார். ஸ்ரீநிவாஸ்-ஐ நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் அதைத் தடுக்க ஐயான் கிரில்லட் ஆடம் மீது பாய்ந்து தடுத்தார். கீழே விழுந்த ஆடம், உடனடியாக எழுந்து ஆத்திரத்தில் ஐயானை சுட்டதில் அவர் மீது இரண்டு தோட்டாக்கள் பட்டு காயமடைந்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பிய ஐயானுக்கு குடும்பத்தோடு இந்தியா வருமாறு ஹோஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. துப்பாக்கியோடு நின்றவருடன் போராடி, இந்தியர்களைக் காக்க முயன்ற அவரது வீரத்தை பாராட்டும் விதமாக இந்தியப் பயணத்தின்போது ஐயான் கவுரவிக்கப்படவுள்ளார்.

Advertisements