சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேககங்கள் தீரும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டம் வாரியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியையும், ஆட்சியையும் உங்களால்தான் காப்பாற்ற முடியும் என்று சசிகலா கூறினார். ஆனால் சசிகலாவை முதல்வராக்க தினகரன் விரும்புவதாக என்னிடம் விஜயபாஸ்கர் கூறினார். நான் முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் திட்டமிட்டே குழப்பத்தை ஏற்படுத்தினர். முதல்வர் பதவியிலிருந்து விலக பல தரப்பிலும் எனக்கு நெருக்கடி வந்தது. சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் என்னை மதிக்கவில்லை. எதைச் சொன்னார்களோ அது நடக்கவில்லை. அவசியமின்றி அரசை மாற்றினார்கள். கட்சியும், ஆட்சியும் தற்போது ஓரிடத்தில் இல்லை.

ஜெயலலிதாவுக்கு தீவிர நோய் எதுவுமில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முயன்றோம். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். சந்தேகம் தீரும்வரை போராட்டம் தொடரும்’ என்றார்.

Advertisements