உத்தரப் பிரதேசம்:உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன், பூனைக்குட்டிகள் என நினைத்து சிறுத்தைக் குட்டிகளை வீட்டிற்குக் கொண்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படேறு கிராமத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் முட்புதர் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு, சிறுத்தைக் குட்டிகள் இரண்டு கிடந்தது. அதைப் பூனைக்குட்டி என நினைத்து வீட்டிற்கு கொண்டு வந்தான். அவற்றுக்கு உணவு வழங்கி பராமரித்திருக்கிறான். அது சிறுத்தைக் குட்டிகள் என்பது அக்கம் பக்கத்தினர் சொன்ன பிறகுதான் தெரியவந்தது. பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அக்குட்டிகளை மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

Advertisements