சென்னை: தனது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் – த்ரிஷா, அனிருத் – ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை சுசித்ரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் போக, செல்வராகவன் – ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின.

இப்புகைப்படங்கள், இ-மெயில் உரையாடல்கள் ஆகியவை பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது குறித்து இயக்குநர் செல்வராகவன் “எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் விடுத்த வேண்டுகோளை மதிக்கிறேன். தொடர்ந்து திரைப்படம் எடுக்கவே விரும்புகிறேன்” என தனது ட்விட்டர் கணக்கில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

தற்போது சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், இ-மெயில்கள் என அனைத்துமே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தனது ட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. அது ஹேக்கர்களின் வேலை என்று சுசித்ரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements