சென்னை: ஜியோவுக்கு போட்டியாக வோடஃபோன் நிறுவனமும் தினம் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச கால் உள்ளிட்ட அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதற்கான மாதந்திரக் கட்டணம் ரூ.346 ஆகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் இலவச இன்டர்நெட் டேட்டா, வாய்ஸ் கால் என தொலைத் தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இதனால் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஜியோவின் ஆஃபர் தொடர்பாக புகார்களும் சர்ச்சைகளும் கூட எழுந்தன. இந்நிலையில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது முன்னணி நிறுவனமான வோடஃபோன் கிட்டத்திட்ட ஜியோவின் ஆஃபருக்கு இணையான ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. அதாவது ரூ.346 க்கு ரீச்சார்ஜ் செய்தால் ஒரு மாதத்துக்கு வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசம். ஜியோ நெட்வொர்க்க்கும் கடந்த வாரம் இதே மாதிரியான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது இதே சலுகைகளை ரூ.303 க்கு வழங்குவதாக அறிவித்தது. வோடஃபோனில் முதலில் ரூ.346 க்கு ரீச்சார்ஜ் செய்யும்போது, இந்த சேவைகள் இரண்டு மாதத்திற்கு (56 நாட்கள்) வழங்கப்படுகின்றன. அதற்கடுத்த மாதங்களில் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் ஒரு மாதத்திற்கான (28) சேவைகளை வழங்கப்படும். இந்த ஆஃபரானது தற்போது மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜியோ அளவிற்கு வோடஃபோனிடம் ஸ்பெக்ட்ரம் இல்லை. எனினும் ஜியோவின் ஆபர்களால், தங்களது வாடிக்கையாளர்களை இழந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisements