சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்ற இயக்குநர்களுக்கு போடும் பாடல்களைவிட மணிரத்னத்தின் படங்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதானோ என நினைக்குமளவுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம்பெறும் மணிரத்னம் காதலை ஒவ்வொரு படத்திலும் இளமை பொங்க கவித்துவமாகப் படைக்கிறார். இவரது படங்களில் நடிப்பது தங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்றளவுக்கு நடிக, நடிகைகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

அந்தவகையில் சீரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்துப் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ராம் சரண் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிரத்னம் காற்று வெளியிடை படத்தின் வெளியீட்டில் கவனம் செலுத்திவருவதால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு பின்னர் வெளிவரும் எனத் தெரிகிறது.

Advertisements