சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து மக்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவு மக்களை காயப்படுத்தியுள்ள நிலையில், அவரது சாவில் மர்மம் உள்ளதென ஓ.பி.எஸ். அணியினர் நாடகமாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் சாவில் எவ்வித மர்மமும் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த சிகிச்சைகள் முதல் அனைத்து நடைமுறையும் அடிக்கடி சுகாதாரத் துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அது தொடர்பான அறிக்கையையும் ஆளுநர், மத்திய அரசு ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையெல்லாம் தெரிந்தும், மீண்டும் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். துடிக்கிறார் என ரமணா கூறினார்.

Advertisements