சென்னை:அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். சமீபத்தில், சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அரசியல் தலைவர்கள் சிலரை, மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் ராதாரவியின் செயலைக் கண்டித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் டிசம்பர் 3 அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

Advertisements