இந்தியா: இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இனி இதுபோன்ற மோசமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த மாட்டோம் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சிகள் மேற்கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்தினை தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியில் எந்த மாற்றமுமின்றி விளையாட வாய்ப்புள்ளது என்றும், இருப்பினும் போட்டியின் போது விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி பேசிய போது கடந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாங்கள் அதிலிருந்து தவறுகளை சரிசெய்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம். இந்திய அணி வீரர்கள் அனைவரும் பெங்களூர் போட்டிக்கு தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நாளைய போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். நாங்கள் என்ன நிலை ஏற்பட்டாலும் இனி பின்வாங்க மாட்டோம்என்று தெரிவித்தார்.

Advertisements