புதுடெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை புரிந்த சாக்‌ஷி மாலிக்கிற்கு அறிவித்த ரொக்கம் உள்ளிட்ட பரிசுகளை இன்னமும் ஹரியாணா அரசு அவரிடம் அளிக்கவில்லை.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு நிகழ்த்தியவர் சாக்‌ஷி மாலிக்.

இது குறித்து சாக்‌ஷி மாலிக் தனது ட்வீட்டரில், “ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றி விட்டென், ஹரியாணா அரசு எப்போது வழங்கும்?”

மேலும் இன்னொரு ட்வீட்டில், “எனது ஒலிம்பிக் பதக்க வெற்றிக்குப் பிறகு ஹரியாணா அரசு அறிவித்தவைகள் ஊடகங்களுக்கான வெறும் விளம்பரம் மட்டும்தானா?” என்றும் வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.

சாக்‌ஷி மாலிக் ஒலிம்பிக் பதக்கம் வென்றவுடன் ஹரியாணா அரசு அறிவித்த ரொக்கம் உள்ளிட்ட பரிசுகளின் மதிப்பு ரூ.3.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்கலம் வெல்வோருக்கு ரூ.2.5 கோடி பரிசு என்று ஹரியாணா அரசு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக அறிவித்திருந்தது.

ரோட்டக்கைச் சேர்ந்த 24 வயது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் 58 கிலோ உடல் எடைபிரிவில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements