கேரளா: ஆர்.எஸ்.எஸ் தலைவரின் மிரட்டல் பேச்சை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சந்திரவத், சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, ’கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும். எனது சொத்து முழுவதையும் விற்று அந்தப் பரிசை அளிப்பேன்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல, கேரள மாநில பாஜக தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements