சென்னை: சசிகலாவை தமிழக சி‌றைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு திமுக தலைமையிலான அரசுதான் அனுமதி வழங்கியது என கூறினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டது எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆண்டுதோறும் கர்நாடாக அரசுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisements