சோமாலியா: கடந்த 2 நாளில் தெற்கு சோமாலியா ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் ஹசன் அலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடும் பஞ்சம் நிலவும் சூழலில், ஒரே நேரத்தில் மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது சிரமமாக உள்ளது.மக்கள் பட்டினியாலும், வயிற்று போக்கினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு போராடி வரும் மக்களை காப்பாற்ற சோமாலிய அரசு முழு வீச்சில் செயல்ப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமாலியாவில் பஞ்சத்தால் இந்த ஆண்டு 2,70,000 குழந்தைகள் இறப்பதற்கு வாய்ப்பிருப்பதாக யூனிசெஃப் ஆய்வில் கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements