புதுடெல்லி: தங்கம் விலை இன்று 10 கிராமுக்கு ரூ.375 உயர்ந்து ரூ.30,100 என்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை ரூ.400 அதிகரித்து கிலோவுக்கு ரூ.43,100 ஆக உள்ளது.

டாலர் மதிப்பு பலவீனத்தினால் உலகச் சந்தைகளின் சாதகமான நிலவரமும், உள்ளூர் சந்தையில் கூடுதல் தேவை காரணமாகவும் தங்கம் விலை அதிகரித்ததாகவும், தொழிற்துறையினர் மற்றும் நாணயம் தயாரிப்பாளர்களின் தேவை அதிகரிப்பினால் வெள்ளி விலை உயர்ந்ததாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகச் சந்தையில் தங்க விலை 0.02% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றிற்கு 1,234.30 டாலர்களாக உள்ளது. வெள்ளி விலை 1.27% அதிகரித்து அவுன்ஸுக்கு 17.95 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது.

ஆனால் தங்கம் விலை ஒரு பவுனுக்கு (8கிராம்) ரூ.24,500 என்று மாறாமல் இருந்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் 99.9, மற்றும் 99.5 சுத்தத் தங்கம் விலை ரூ.375 அதிகரித்து 10 கிராமுக்கு முறையே ரூ.30,100 மற்றும் ரூ.29,950 என்று உள்ளது .

வெள்ளி நாணயங்கள் 100-க்கு ரூ.1000 அதிகரித்து ரூ.74,000 ஆக உள்ளது.

Advertisements