சென்னை: மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் அறிவிக்காத நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி, 21.43 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisements