சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மேகமூட்டத்துடன் வானிலை காணப்படும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி நாங்குநேரி – 6 செ.மீ, வேதாரண்யம் 5 செ.மீ, கொடைக்கானல் 4 செ.மீ, கமுதி, பேராவூரணி, ராமேஸ்வரம், பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் மேகமூட்டத்துடன் காணப் படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.

Advertisements