சென்னை: தயாரிப்பாளர் சங்கத்திற்கு அளிக்கும் ‌வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

‌நடிகர் சங்கத் தேர்தலைத் தொட‌ர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்லில் தலைவர் பதவிக்கு போட்டி‌யிடும் விஷால் சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்‌கள் மத்தியில் பேசினார். அப்போது திரைத்துறையில் சிறு தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நல்லது நடக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் அனைத்துத் தரப்பினருக்கு‌ம் நல்லது நடக்கும் வகையில் நடவடிக்கை ‌எடுக்கப்படும் என உறுதியளித்தார்.‌ விஷாலுடன், அ‌வரது அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் ராஜ், கவுத‌ம் மேனன் மற்றும் செயலாளர் பதிவிக்கு போட்டியி‌டும் மிஷ்கின் உள்ளிட்டோரும் செய்தியாளர்களை சந்தித்தனர். விஷால் அணியைச் சேர்ந்தவர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏப்ரல் ‌2ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisements