சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் திடீரென மாணவர்கள் திரண்டதால் அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மக்கள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாணவர்கள், திரைத்துறையினர், விவசாயிகள், தமிழ் அமைப்புகள் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாடிவாசலுக்காக சென்னையில் திரண்டதுபோல் நெடுவாசலுக்காக போராட சென்னையில் உள்ள மாணவர்களுக்கு சமூகவலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி முன்பு ஏராளாமனோர் திரண்டனர். தகவலறிந்த போலீஸார், போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்க சென்னையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisements