கோவை: கோவை மாவட்டத்தில் பள்ளி ஒன்றின் இரும்பு கதவை உடைத்து, கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் பள்ளியை சேதப்படுத்தின.

கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அருகே காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து பள்ளியை சேதப்படுத்தியுள்ளன. பள்ளியின் இரும்பு கதவை உடைத்து, 4 காட்டு யானைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.

Advertisements