சென்னை: பாடகி சுசித்ரா மீது இந்திய தேசிய லீக் கட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் பதிவுகள் மற்றும் புகைப்படங்களால் சில நாட்களாகவே சர்ச்சை நீடிக்கிறது. சமீபத்தில் சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்டிரியா , ஹன்சிகா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. சமூக வலைதளங்களில் அதிகமானவர்கள் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்தும் விவாதித்தும் வந்ததால் சுசித்ராவின் டுவிட்டர் பதிவுகள் ட்ரெண்டாகின. இந்த நிலையில் அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் விளக்கமளித்துள்ளார். இதையடுது அவரது டுவிட்டர் கணக்கு அழிக்கப்பட்டது.

இந்நிலையில் சுசித்ரா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படம் வெளி வருவது இளைஞர்களை பாதிக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகார் மனுவில் இந்திய தேசிய லீக் கட்சி கோரியுள்ளது.

Advertisements