சென்னை: தமிழ் சினிமாவில் `பாஞ்சாலங்குறிச்சி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீமான். அவர் இயக்கத்தில் கடைசியாக மாதவன் நடித்த திரைப்படமான `தம்பி’ வெளியானது. அதன் பின்னர் சீமான் தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்’ என்ற படத்தை இயக்கவிருந்தார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், `பகலவன்’ படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அரசியலை மையமாக கொண்டு வெளியான விஜய் ஆண்டனியின் ’எமன்’ படம் தற்போது வெற்றிகரமாக ஓடி வருவதால், ’பகலவன்’ படமும் அரசியல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements