சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து, நடிகை லதா தனது ஆதரவைத் தெரிவித்தார்.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நடிகை லதா இன்று காலை சென்றார். அங்கு அவரிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ஜெயலலிதா வழியிலான ஆட்சியை, ஓ.பன்னீர் செல்வத்தால்தான் நடத்த முடியும் என தெரிவித்தார். அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் அவரது அணிக்கு வர வேண்டும் என்றும் நடிகை லதா கேட்டுக்கொண்டார்.

Advertisements