சென்னை: இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விஜய் 61’. இந்த படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ‘காமராஜ்’ இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பில் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவுள்ளார்.

1980கள் மற்றும் தற்காலத்தில் என இரண்டு பருவங்கள் இணைந்த திரைக்கதையுடன் கூடிய இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ‘நான் ஈ’, பாகுபலி உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisements