சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என ஓ.என்.ஜி.சி இயக்குனர் ஜெ.கே.திவேதி தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் 11வது குறிக்கோள் மாநாடு கேரள மாநிலம் பூவாறில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.என்.ஜி.சி இயக்குனர் ஜெ.கே.திவேதி, கடந்த 1984ம் ஆண்டு முதல், நரிமணம் உள்ளிட்ட தமிழகத்தின் சில இடங்களில் எண்ணெய் துரப்பணிகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு ராயல்டி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிதியானது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் ஜெ.கே. திவேதி குறிப்பிட்டார்.

Advertisements