புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 18-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை கைவிடுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். போராட்டக் குழுவினருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார். இதேபோன்று இயக்குனர் கரு.பழனியப்பனும் நேரில் சென்று தனது ஆதரவைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, சேலத்தில் நடந்த போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements