சென்னை:தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கான ஆயிரத்து 486 கோடி ரூபாய் நலதிட்டங்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் வாகனங்களையும், வணிகவரி, பதிவுத்துறையினருக்கான வாகனங்களையும் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு அதிநவீன கருவிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது வழங்கினார்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கான ஆயிரத்து 486 கோடி ரூபாய் திட்டங்களையும்,சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Advertisements