சென்னை: அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவது உறுதியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தின் விற்பனை வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விவேகம் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வரும் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசனின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அக்சராஹாசன் இந்த படத்தில் வேவுபார்க்கும் உளவாளியாக நடிப்பதாகவும், அவரை உலகின் மிகப்பெரிய கொடூரமான ஒரு நெட்வொர்க் கடத்தி செல்வதாகவும், அவரை மீட்க அஜித் செய்யும் அதிரடி நடவடிக்கைகள் தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Advertisements