சென்னை: எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாவின் மகள் நான் என்று ஒரு பெண் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தீபா, ஓ.பி.எஸ், சசிகலா என அவர்கள் மூவருக்கும் தற்போது பெரிய போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ப்ரியா மகாலட்சுமி என்ற பெண், என்னுடைய தாயார் ஜெயலலிதா என்றும், என்னுடைய தந்தை எம்.ஜி.ஆர். என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தான் சசிகலாவால் அதிகம் சோதனைக்கு ஆளாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனாலும் சசிகலா ஜெயலலிதாவுடன் இருப்பதால்தான் தன்னால் ஏதும் செய்யமுடியவில்லை என்று ப்ரியா கூறினார். ப்ரியாவின் இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி சதானந்தவதி அவர்களுக்கும், இரண்டாவது மனைவி ஜானகி அம்மாள் அவர்களுக்கும் குழந்தையில்லை என்பது வரலாற்று உண்மை.

Advertisements