சென்னை: ஒரு குடுபத்தின் பிடியில் அதிமுக சிக்கி தவிப்பதாக நடிகர் ஆனந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்தராஜ், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டது. அந்த கொள்கையையே ஜெயலலிதாவும் கடைபிடித்தார். ஆனால், அதிமுக தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று விட்டது என்றார். கட்சியில் குடும்பத்தினரின் தலையீடு இருக்காது என்று டிடிவி தினகரன் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? எனக் கேள்வி எழுப்பிய ஆனந்தராஜ், இதற்கு ஒரே தீர்வு உடனடியாக அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி, அதில் வெல்பவரிடம் கட்சி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவின் உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisements