சென்னை: செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் சலுகைகளை ஆராய வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

செல்ஃபோன் நிறுவனங்களுக்கிடையே ஏராளமான போட்டிகள் நிலவுகிறது. அதைச் சமாளிக்க, பல்வேறு சலுகைகளை அவை அளித்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பல செல்ஃபோன் சேவை நிறுவனங்கள் இந்தச் சலுகைகளை இப்போது வழங்கி வருகின்றன. இது குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆராய வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது. செல்ஃபோன் நிறுவனங்கள் தரும் சலுகையால் அவற்றின் நிதிநிலைப் பாதிக்கப்பட்டு வங்கிகளுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவது பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisements