சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 22 ம் தேதி இரவு 10:30 மணிக்கு அம்புலன்ஸ் வாகனம் அப்போலோ மருத்துவமனையில் கேட்கப்பட்டது. இரவு 10:25 மணிக்கு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது நீரிழிவு, ரத்த கொதிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற நோய்களால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு உலக புகழ் பெற்ற லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவின் இதயம் செயல்படவில்லை, மூளை செயல்பாட்டிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசு கேட்டு கொண்டதற்கு இணங்க கில்நாணி தலைமையிலான எய்ம்ஸ் குழுவும் சிகிச்சை அளித்தது. ஜெயலலிதாவின் நிலை குறித்து ஓ.பி.எஸ் மற்றும் விஜயபாஸ்கரிடம் விளக்கப்பட்டது. தம்பிதுரை, சசிகலா மற்றும் அரசு அதிகாரிகளிடமும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விளக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அரசியல் கட்சிகளின் புகார் ஆதாரமற்றது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisements