புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞர்களையும், பொதுமக்களையும் கவரும் விதத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘இது கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற பாடலை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் ‘நெடுவாசல்’ போராட்டத்திற்கும் ஒரு பாடல் இசையமைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார்.

விவசாய நிலங்களை மலடாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 17 தினங்களுக்கும் மேல் போராடி கொண்டிருக்கும் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களின் போராட்டகளத்திற்கு இன்று ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அவரோடு இயக்குநர் கரு. பழனியப்பனும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

ஜி.வி.பிரகாஷ், அருண்காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடலின் ஒருசில வரிகளை ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘தியாகம் செய்வோம் வா’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலின் முதல் ஒருசில வரிகள் இதோ:”

தியாகம்செய்வோம்வா

உறங்காதே தமிழா

இறங்காதே தமிழா

கலங்காதே தமிழா

கசங்காதே தமிழா

Advertisements