பெங்களூரு: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

185 ரன்கள் இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடி வந்தது. பின்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

35.4 ஓவரில் அந்த அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அஸ்வின் ஆட்ட நாயகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Advertisements