மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை அறிவித்துள்ளது.

இந்திய அணியின் தற்போதைய ஸ்பான்சரான ஸ்டார் டிவியின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் எண்ணமில்லை என்று அந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக, ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஓப்போ நிறுவனத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும், 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போ நிறுவனம் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements