சென்னை: இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். உயிலிந்த மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு 5 லட்சம் நிதி வழங்கியுள்ளது. மேலும், காயமடைந்த மீனவர்களுக்கு 1 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதாம்பாலம் பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் தங்கச்சிமடம் ஐயன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டுவிட்டு மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பினர்.

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisements