இந்தியா: இந்தியாவிற்கு 30 வருடங்கள் சேவை செய்த ஐஎன்எஸ் விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று ஓய்வு பெற்றது.

ஐஎன்எஸ் விராட் 1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தினால் உருவாக்கப்பட்டது. 20 ஆண்டுகள் பிரிட்டிஷ் கடற்படைக்காகப் பணியாற்றிய பிறகு, மே 12, 1987 இந்திய கடற்படைக்கு அற்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கிய கப்பல் ஆகும்.

ஐஎன்எஸ் விராட் உலகின் மிக பழமையான போர்க்கப்பல் என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. ஐஎன்எஸ் விராட்டை நிலம் மற்றும் கடலில் பயன்படுத்த முடியும். இந்த கப்பல் பிரிட்டனில் இருந்த போது எச்எம்எஸ் ஹெர்ம்ஸ் என அழைக்கப்பட்டது. இந்திய கடற்படையில், விராடை ‘தாய்’ என்று அழைத்தனர். மேலும், இக்கப்பல் ‘தி கிராண்ட் ஒல்ட் லேடி’ எனவும் அழைக்கப்பட்டது.

ஜூன் மாதம் 23-ம் தேதி ஐஎன்எஸ் விராட் மும்பையில் இருந்து கொச்சிக்கு அதன் இறுதி பயணத்தை மேற்கொண்டது. இன்று மாலை நடைபெற்ற விராடின் பிரிவு உபசார விழாவில், இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் கப்பலிலுள்ள இந்தியக் கொடி இறக்கப்பட்டது.

இந்த கப்பல் சொகுசு உணவகமாகவோ, கடல் அருங்காட்சியகமாகவோ மாற்றப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisements