லண்டன்: புதிதாக கொண்டுவரப்பட்ட விதிமுறைகளுக்கு கீழ், மோசமான நடத்தையில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை ஆட்டத்தை விட்டு வெளியே அனுப்பும் அதிகாரம் நடுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், மும்பையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு, சில புதிய சட்டங்களை எம்.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைத்தது. மேலும் பேட் அளவுகளுக்கான கட்டுப்பாடுகளையும், ரன் அவுட் விதியில் செய்யப்பட்ட திருத்தத்தையும் எம்.சி.சி. வெளியிட்டுள்ளது.

’வீரர்களின் மோசமான நடத்தைக்கு எதிரான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த சரியான நேரம் இது. அடிமட்ட அளவில் வீரர்களின் மோசமான நடத்தையால் பல நடுவர்கள், கிரிக்கெட் விளையாட்டை விட்டுச் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற கடுமையான விதிகள் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று நினைக்கிறோம்” என்று எம்.சி.சி-யின் கிரிக்கெட் தலைவர் ஜான் ஸ்டீபன்சன் கூறினார்.

அக்டோபர் 2017 நடைமுறைக்கும் வரும், இந்த புதிய விதிகளில், கிரிக்கெட் மட்டையின் அதிகபட்ச அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கிரிக்கெட் மட்டையின் அகலம் 108 மிமீ, ஆழம் 67 மிமீ மற்றும் முனைகள் 40 மிமீ-க்கு மேல் இருக்க கூடாது.

Advertisements