ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாரதீய மீனவர் கூட்டவை வலியுறுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மீனவர் கூட்டவை சார்பில், இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிரந்திய தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதில், துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், காயமடைந்த மீனவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, கூட்டவையின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Advertisements