சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் வீரர்களின் அறைக்கே சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மாநில அளவிலான கிரிக்கெட் அணிகளுக்கான விஜய் ஹசாரே கோப்பைக்கான டி20 தொடர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நடந்துவருகிறது. இதில், ஜார்க்கண்ட் அணிக்கு தோனி தலைமை தாங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான போட்டியில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு ஜார்க்கண்ட் அணி தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூலின் கோரிக்கையை ஏற்று, அம்மாநில கிரிக்கெட் அணி வீரர்களின் அறைக்கு சென்று தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுடன் சிறிதுநேரம் செலவிட்ட தோனி, கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

Advertisements