சென்னை: சிவா இயக்கத்தில் விவேகம் என்ற படத்தில் பிஸியாக தல “அஜித்” நடித்து வருகிறார்.படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் யாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கிறது.இந்நிலையில் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தான் அஜித்தை அடுத்து இயக்கப்போவதாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எழுத்தாளர் பால குமாரனுடன் இணைந்து விஷ்ணுவர்தன் சோழ ராஜ்ஜியம் பற்றிய ஒரு கதையை தயார் செய்து வருவது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்.

இந்த சோழ ராஜ்ஜிய கதையில் அஜித் நடிப்பாரா இல்லை, வேறு கதையில் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இயக்குகிறாரா என்பது தெரியவில்லை.

Advertisements