சென்னை: இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படம் பாகுபலி இரண்டாம் பாகம். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் எப்போது என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு.

மார்ச் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் “பாகுபலி 2” படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

இதை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி “பாகுபலி 2” படத்தின் ட்ரைலர் மார்ச் 15ஆம் தேதி வெளியானால் கண்டிப்பாக சமூக தலத்தில் பல புதிய சாதனைகள் படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisements