சென்னை: நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சே பாக்கல. ஆனா வாய்ப்பு வந்துட்டு. இப்படின்னு சில பிரபலங்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.ஆனால் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்குள் அவர்களின் பாதி ஆயுள் முடிந்திருக்கும்.

அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு துறையாக முன்னேறி வருவார்கள்.இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் விஜய்சேதுபதி.பல இன்னல்களை அனுபவித்து, முன்னேறிய இவர் இன்று முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதுபோல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் படங்களை கண்ட அஜித் சமீபத்தில் அழைத்து பாராட்டி பேசி ஆலோசனைகள் சொன்னாராம்.இதனை விஜய்சேதுபதி தன் மனைவியிடம் சொல்ல, அவர் கோபப்பட்டராம்.நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் கோபம்? அப்படித்தானே கேட்கிறீர்கள்.

விஜய்சேதுபதியின் மனைவி ஜெஸி, திவீர அஜித் ரசிகையாம்.அப்படி தெரிந்தும், அஜித்தை காண மனைவியை அழைத்து செல்லவில்லை என்பதால்தான் இந்த கோபமாம்.

Advertisements