சென்னை: வங்கிச் சேவையை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் முனைப்பில் ம‌‌த்திய‌ அரசு உள்‌ள நிலையில்‌‌ மறுபுறம் வங்கிச் சேவைகளுக்கான கட்ட‌ணங்களும்‌ வேகமாக உயர்‌ந்து ‌வருகின்றன.

பாரத ‌ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு‌ வைத்துள்ள‌வர்கள் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் ரொக்க பணப்பரிமாற்றம் செய்தால் 50 ரூபாய் கட்டணம் மற்றும் சேவை வ‌ரி வசூலிக்கப்‌படும்‌ என தெரிவிக்கப்பட்டு‌ள்ளது‌. இது தவிர குறைந்த பட்ச கணக்கு ‌இருப்புத் தொகை இல்லாவிட்டால்‌ 100 ரூபாய் வரை அபராதம் மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் அட்டை வைத்துள்ளவர்களுக்கு அட்டையின் வகையை பொறுத்து ஆண்டுக்கு 125 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐசிஐசிஐ மற்றும்‌ எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளில் சேமிப்பு மற்றும் சம்பளக் கணக்கு வைத்துள்ளவர்கள் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் ரொக்கமாக ப‌ணப்பரிமாற்‌றம் செய்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு 150 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்‌து. ஆக்சிஸ் வங்கியும் இது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

பிற பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும் கூட புதிய கட்டண விகிதங்களை அறிவிக்கும் எனத் தெரிகிறது. ரொக்க பணப்பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தி மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என வங்கிகள் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரொக்க பணப்பரிமாற்றத்தை கட்டுப்படுத்த இது சரியான நடவடிக்கை அல்ல என்று அகில இந்திய வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisements