சென்னை: பரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ’சிம்பா’. இதன் இசை வெளியீடு இன்று நடக்கவிருக்கிறது. பிரேம்ஜி சிம்பாவில் முக்கியமான வேடமேற்று நடித்திருக்கின்றார். தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே மனபிரம்மையில் உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும் என்பதை தான் சிம்பா படம் பேசுகிறதாம்.”சிம்பா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் போது நடிகர் விஷால் அணிக்கு எதிராக,சரத் குமார் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார் நடிகர் சிம்பு.மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில்,விஷால் அணியினரை சிம்பு பயங்கரமாக விமர்சனம் செய்து திட்டி தீர்த்தார். ஒருமையில் பேசினார். இதற்கு விஷாலும் பதிலளித்தார்.

‘சிம்பா’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.இந்த விழாவில் விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு,பாடலை வெளியிட உள்ளார்களாம்.

பொதுவாக சிம்பு மற்றும் விஷால் ஆகிய இருவரும் வெளிப்படையாகவும், உணர்ச்சிவசப்பட்டும் பேசக் கூடியவர்கள். எனவே நாளை நடைபெற உள்ள விழாவில், இருவருக்கும் மோதலும் நடக்கலாம் அல்லது மேடையிலேயே கட்டிப்பிடித்து நண்பர்களாகி விடலாம் என்று சொல்கிறார்கள். சண்டை போட்ட சில நடிகர்கள் நேரில் சந்திக்கும் போது கட்டிபிடித்து நண்பர்களானதற்கு நீண்ட பட்டியல் உண்டு. ஆனால் சிம்பு வராமல் எஸ்கேப் ஆகிவிடுவதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள் திரை வட்டாரத்தினர்.

Advertisements