எழும்பூர் : இந்தியன் வங்கி கோப்பைக் கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி வரும் 11-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்குகிறது. 16-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தெற்கு ரயில்வே, ஐ.சி.எப்., வருமான வரித்துறை, மத்திய கலால் துறை, தமிழ்நாடு காவல் துறை, சென்னை மாநகர காவல் துறை, இந்திய விளையாட்டு ஆணையம், ஹாக்கி அகாடமி, பொது கணக்காளர் துறை, லயோலா கல்லூரி ஆகிய 12 அணிகள் பங்கேற்க உள்ளன.

போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisements