திருவாரூர்: திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேக்கரை என்ற இடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை ஓ.என்.ஜி.சி மேற்கொள்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடினர். ஓ.என்.ஜி.சியின் வாகனங்களை சிறைபிடித்து பணிகளை நிறுத்திய அவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து அப்பகுதியிலிருந்து ஊழியர்கள் வெளியேறினர். காவிரியாற்றுப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்திய பொதுமக்கள், விவசாயத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் ‌திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

Advertisements