புதுக்கோட்டை: மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் 20 நாள்களாக தொடர்ந்து மக்கள் போராடி வருகிறார்கள். இதில் ஒப்பாரிவைக்கும் போராட்டத்தின் போது பொன்னம்மாள் என்ற மூதாட்டி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 20 நாள்களில், வைகோ, திருமாவளவன், சீமான், முத்தரசன், மு.க.ஸ்டாலின், அன்புமணி, டி.ராஜா, திருச்சி சிவா, ஹெச்.ராஜா போன்ற தலைவர்களும், திரைப்பட நடிகர்கள், மன்சூர் அலிகான், ஜி.வி.பிரகாஷ், பெப்சி விஜயன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், மு.களஞ்சியம், சசிகுமார் ஆகியோரும் நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

கடந்த 21 நாள்களாக போராட்டக்களத்துக்கு வரும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அனவயல், சிறுவாவிடுதி, புள்ளான் விடுதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஒவ்வொரு நாளும் ஒரு கிராம மக்கள், விளைபொருள்கள், பலா, வாழை உள்ளிட்டவற்றுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்று ஒப்பாரிவைக்கும் போராட்டத்தில் பொன்னம்மாள் என்ற மூதாட்டி மூச்சுத்திணறல் காரணமாக மயக்கமடைந்தார். மயக்கமடைந்த பொன்னம்மாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Advertisements