புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், நெடுவாசல் பகுதி மக்கள் தற்போது குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இயக்குநர் கவுதமன் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நெடுவாசல் போராட்டம் தொடங்கி 20 நாட்களுக்கும் மேலாகியும் மத்திய அரசு பதிலளிக்காததால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் குளத்தில் இறங்கி கோஷம் எழுப்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements